நம்பாத்துக் கண்ணாவுக்கு
பொழிந்தால்
வானுக்கு அழகு
புரிந்தால்
புன்னகைக்கு அழகு
விரிந்தால்
தாமரைக்கு அழகு
விளைந்தால்
நெல்லுக்கு அழகு
வளைந்தால்
வான வில்லுக்கு அழகு
உயர்ந்தால்
உள்ளத்திற்கு அழகு
உறங்கினால்
உனக்கழகோ கண்ணா ?
----கவின் சாரலன்