அண்ணன் வருவான்

கண்ணே, கண்ணில் தெரியும்
வண்ணக் காட்சி கோபமோ!
எண்ணத்தில் ஏதும் வருத்தமோ!
அழைத்தும் அண்ணன் விளையாட
விழைந்து வரவில்லை என்ற
வழக்கில் ஏமாற்றமோ! கலக்கமோ!
கலங்காதே, கண்ணே; அண்ணனுன்
நலம்காண உன்னோடு கிரிக்கெட்
விளையாட விரைந்தோடி வருவானே!