மரபணு மாற்றம்

ஆத்தாளையும் அப்பனையும்
உக்காரவச்சு சாப்பாடு போட்ட
மரபெல்லாம்
மறந்து போய்..
பெரிசே... செவனேன்னு
கெட..பெத்த கடனுக்கு
பொங்கிப் போடறமல்ல..
இரண்டாம் தலைமுறை
இறுகிப் போய்..
மூன்றாம் வயதில்
புத்தக மூட்டை ஏற்றி
முதுகுக் கூன் கொடுத்த
பாவத்துக்காய்..
அப்பா..இங்கு நல்ல வசதி..
சாப்பாடு ..வேறென்ன..
முதியோர் இல்ல
மூன்றாம் தலைமுறை
முனகிப் போய்..
முகநூலில்
முகங்காட்டும்
செல்பி தலைமுறை
தன்னலம் மிக்கதாய்
தரிசாகிப் போகிறதோ..
எவர்
கொண்டுவந்தார்?
மனிதருக்குள்ளே
மரபணு மாற்றம்...