சிரித்தபோது எடுத்த புகைப்படம்
உள்க் காயங்கள், கண்களில் அனலாய்...
வெளிக் காயங்கள், சிதைந்த சதைத் துண்டுகளாய்..
உடைந்து கிடந்தது இதயம்..
சிதைந்து ஒட்டவும் முடியாமல்..
உழைத்ததட்கு கரங்களைத் தவிர- வேறு,
நிலையான சாட்சி இல்லை..
கலைத்துப் போனதற்குக் காட்டிக் கொடுக்கக்,
கண்ணீரும் சாட்சியாய் இல்லை..
நிலை குலைந்த உருவம்..
கலை குன்றிய வதனம்..
சிதரிவிட்டதென் வாழ்க்கை..
சிந்திக்க மறந்த சில தருணங்களால்..
சந்திக்க நேர்ந்த சில விசமிகளால்..
சந்தி சிரிக்கலான நிலை எனது..
சிரித்த நாட்களை சந்திக்க மட்டுமல்ல,
சிந்திக்கவும் நினைவுக் காற்றுகளில்,
சத்தியமாய் ஈரப்பதனில்லை..
தூசு தட்டித் தேடுகிறேன்- எங்கே,
நான் சிரித்தபோது எடுத்த புகைப்படம்..

