மலர்ந்த சோகம்...

செடி முழுக்க ரோஜாவாய்
சிகப்பும் ரோசுமாய் கண்ணைப் பறித்த
ரோஜாக்களைக் காணோம்...

யார் தான் பறித்தார்களோ?
எப்படித் தான் மனது வந்ததோ?
எத்தனை கிள்ளை செடி தாங்கியதோ?
ஒருவேளை மௌனமாய் அழுகிறதோ?

யோசனையில் நொந்து போய்
வீட்டிற்குள் நுழைந்தால்...
பக்கத்து வீட்டு அம்மணி
எனக்காய் ரோஜா பூக்களோடு...

மேஜை மீது அலங்காரத்திற்கு
வாட வாட வாசனை வீச
ரோஜாக்களின் சிரிப்பில்
சொல்ல முடியாத சோகம்...

எழுதியவர் : shruthi (14-May-11, 7:32 pm)
Tanglish : malarntha sogam
பார்வை : 529

மேலே