கலவை

முழு வெளிச்சத்தில் ஒன்றுமில்லை
முழு இருட்டிலும் ஒன்றுமில்லை

வெளிச்சத்தில் சில இருட்டு கோடுகளும்
இருட்டில் சில வெளிச்சத்தின் கோடுகளுமே
பொருளாய் பூவாய் உருவமாய் அருவமாய்...

நல்லவன் என்று யாருமில்லை
கெட்டவன் என்றும் யாருமில்லை

நல்லவர்க்குள்ளும் சில நச்சு எண்ணங்கள்
கெட்டவர்க்குள்ளும் சில நல்ல எண்ணங்கள்
நல்லதும் கெட்டதும் கலந்த பிறப்புகள்...பயணங்கள்...

எழுதியவர் : ஸ்ருதி (14-May-11, 7:18 pm)
Tanglish : kalavai
பார்வை : 391

மேலே