எழுத்தா(நி)
ஆயுதம் எடுப்போம்,
நல்லாயுதம் எடுப்போம்.
தோல்வி கல்லை துளைத்தெடுக்க.!
காகிதம் எடுப்போம்,
நாம் காகிதம் எடுப்போம்.
எழுத்தெனும் முத்திரை பதிக்க.!.!
கந்தலான ஆடையுடுத்தி,
பருத்தி கொணர்ந்த மாமனிதா.!
நீ இட்ட பயிர் நிலத்தில் மட்டுமா?
உன் மனதிலும் தான்.
விதைவிடுத்து வேர் விழட்டும்,
உன் மனதை துளைக்கும் அதன் ஆழம்.
அப்போது,
உன் எழுச்சிமிக்க எண்ணக்கூற்றை
எழுத்துக்களாக்கு.!
உன் எழுத்தை ஆணியக்கு,
உன் எழுத்தாணியை ஆயுதமாக்கு.
உன் மனதின் ஆழத்தில்
எழுத்துக்களை கூர்மையாக்கு.
அது உழுது காட்டும்
புதியதோர் பயிர் செய்ய,
ஆயுதம் எடுப்போம்,
மீண்டும் ஓர் ஆயுதம் எடுப்போம்.
புதியதோர் புரட்சி செய்ய