வெள்ளி செல்லி

என் அருமை தோழியே..
உன் அழகை வர்ணிக்க இவ்வுலகில் இல்லை ஒரு மொழியே...
கள்ள கபடம் இல்லாதது உன் முகமே..
கல்லும் வைரமும் ஒளி வீசும் உன் தேகமே...
முகிலினத்தின் முகப்பில் இருக்கும் முல்லை பூவே..
உன் முகம் மலர்ந்தால் எழுந்திடுமே மாயதீவே...
எவருக்குத்தான் உன் மேல் இல்லை மோகமே..
யாருக்குத்தான் அறிய முடியும் உன்னுடைய ஆழ்மனது என்ற மறுபக்கமே...
அடியே பெண்ணே..
அடியேனின் கனவு கண்ணே...
அல்லும் பகலும் உன்னை காண ஏங்குகிறேன்..
காலையில் உன் தமையனின் சர்பம் போல் வெப்பம் கக்கும் கரங்களிலிருந்து என்னை காத்துக்கொள்ள போராடுகிறேன்...
இரவில் உன் உறவை இரவல் கேட்க யாசிக்கிறேன்....
விடியும்வரை உன் முல்லைக்கொடி தேகத்தில் கொள்ளை போக ஆசைபடுகிறேன்.....
ஆம் பெண்ணே..
கதிரவனின் அன்பு தமக்கையே...
தினம் என்னை வலம் வரும் பேரிகையே....
உன் கரம் பிடிக்க ஏங்குகிறது என் கையே....
(நிலவு என்ற அந்த பெண்...மீண்டும் நிலவு என்று நினைத்து இதை படிக்கவும் )...