கவி போராளி
இலைகளுக்கு பின்னால்
புடைத்த நரம்புகளில்
விடியாத பக்கங்களை
விடியலாய் நிரம்பினேன்.....
உரசியே தேய்ந்து
ஊரும் ஆற்றின்
வற்றிய ஆயுளை
கண்ணீரில் நிரம்பினேன்....
கனத்த மடல்களை
சுமந்து கிழிந்த
காற்றின் வெந்தபுண்ணுக்கு
விசிறும் நாசியாய் நிரம்பினேன்....
தடங்களை மட்டுமே
புதைத்த மண்ணுக்கு
என் தடமாய்
மரணத்தை நிரப்பினேன்