நெஞ்சுக்குள் இருக்கும் உன்னை மறப்பதெப்படி 555

நெஞ்சுக்குள் இருக்கும் உன்னை மறப்பதெப்படி 555

உயிரே...

உனக்காக நான் எழுதிய முதல் கடிதத்தை
உன்னிடம் கொடுத்த போது...

நீ கிழித்தெறிந்தாய்...

சில எழுத்துகள் மட்டும்
முழுமையாக...

அந்த எழுத்துகளை போலதான்
என் காதலும்...

நீ அக்னியாய் வார்த்தைகளை
ஒவ்வொரு முறையும் கொடுத்தாலும்...

எளிதாக உன்னை மறந்துவிட
நீ வெளியில் இல்லையடி...

என் நெஞ்சுக்குள்
இருக்கிறாயடி நீ...

நிஜத்தில் நீ என் காதலை
ஏற்க்க மறுத்தாலும்...

என் கனவில் நீ
தினம் தினம் வந்து...

என்னோடு கொஞ்சிவிட்டுதானடி
செல்கிறாய்...

அதனால்தாண்டி
என் கனவுகளில்...

நிஜமான உன் நினைவுகளை
தேடி அலைகிறேனடி நான்...

என் எதிரே நீ கடந்து
செல்லும் நேரங்களில்கூட...

என் சிந்தனைகளை இழந்து
உன்னை கடக்கிறேனடி நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jul-15, 7:54 pm)
பார்வை : 523

மேலே