மாய்ந்து போன சொந்தம்
எனை உதறிய ஒரு இதயம்...
மறுபடியும் எனை ஏற்க சம்மதம் தெரிவித்தது...
ஆழ் மனதில் வீழ்ந்த ஆறா வலி...
அதை ஏற்க மறுத்தது...
வெறும் வார்த்தைகளாக மலர்ந்த காதல் என்றால் என்றோ கரைந்தோடி இருக்கும்...
வாழ்க்கையாய் வாழ்ந்த காதல் என்பதால் சிறு நொடி கூட சிதறி போகவில்லை என் சிந்தனையில் இருந்து...
இதே வலி எனை மறுபடியும் ஏற்க நினைத்த உன் மனதிலும் இருக்கும் என்பதை அறிந்தேன்...
எனை நினைத்தே வாழ்ந்த உன் மனதில் இருந்து எனை எரிக்க ஒரே வழி...
நான் இயற்றிய நற்பெயரை நானே கலைந்தெரிவதே...
உவமையாய் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உன்னால் எனக்குள் பிறந்தது...
அது என்றும் இன்னொருவருக்கு சொந்தமாகாது...
ஆனால் அதை இன்னொருவருக்கு சொந்தமாகும் நிலை உருவாக்கி அது உனக்கு தெரிய நேர்ந்தால்...
என் நற்பெயர் தவிடு பொடியாய் மாறும்...
அதில் உன் வாழ்க்கை புதியதாய் பிறக்கும்...
நான் தவறாய் உச்சரித்த வார்த்தைகளை உண்மை என்று நம்பிய நீ...
உன் உச்சி முதல் பாதம் வரை உன்னை நனைத்த வார்த்தைகளை ஒரு நிமிடம் நினைத்திருந்தால்...
உள்ளார்ந்து யோசிக்கும் திறன் இருந்தால்...
உன் இமைகள் ஒரு நொடி படபடக்கும்...
சுய லாபத்தால் சிந்தனை மங்கி போகும் மானுடனில் நானும் ஒருவனே...
அனால் சுய மரியாதை உன் முன் இழந்தது உன் நலனுக்கே...
இமயம் பிளந்து நான் வளர்த்த நற்பெயரை நானே கெடுத்தேன்...
உன் குடும்பம் நலம் பெறவே...
உணரும் தருவாய் வாராது என தெரிந்தும்...
வாக்கியம் பதித்து விட்டேன் என்றாவது ஒரு நாள் என் கலங்கம் நீக்க...
ஒரு துளி கண்ணீராவது வரும் என்று...
ச்சீ என்ற இழி சொல்லோடு இனி என்றும் உன் மனதில்...
குடியேற முடியா பாவியாய் விடை பெறுகிறேன்...
இப்பூவுலகத்தில் இருந்து...