வேண்டும்

அவள்
சாய்ந்துக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
ஜன்னலாய் இருக்க வேண்டும்
நான்

அவள்
இறுக்கிப் பிடித்து
எழுதும் எழுதுக்கோலாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
படித்து சிரிக்கும்
கவிதையாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
துள்ளிக் குதித்து
ரசிக்கும் மழையாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
கூந்தலை
அலைபாய செய்யும்
காற்றாக வேண்டும்
நான்

அவள்
தட்டிக் கொடுக்கும்
விசைப்பலகையாக
வேண்டும்
நான்

மேல் சொன்ன அவளாக
நீ வேண்டும்
உன்னவனாக வேண்டும்
நான்

எழுதியவர் : மீ.ஜீவானந்தம் | (8-Jul-15, 1:50 am)
சேர்த்தது : mdujeeva
Tanglish : vENtum
பார்வை : 50

மேலே