mdujeeva - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : mdujeeva |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 31-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 61 |
I like to read and write Tamil Poems, Stories.
Visit My Blog:
www.jeevanan.blogspot.com
இதுவரை உனைப் பார்த்த போது
மயங்கினேன்...
உனைப் புடவையில் பார்த்த போது
உறைந்து போனேன்!!
இதுவரை உனைப் பார்த்த போது
மயங்கினேன்...
உனைப் புடவையில் பார்த்த போது
உறைந்து போனேன்!!
நீ ஏறியவுடன்
ஒவ்வொரு தளத்திலும்
நிற்க சொல்கிறேன்
மின் தூக்கியிடம்
இப்படி ஒரு மழை நாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நனைய வேண்டும் நாம்...
காற்றில்
ஓவியமிடும்
உந்தன்
நெற்றியோர முடியில்
சிக்கி தவிக்கிறேன்
அவள்
சாய்ந்துக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
ஜன்னலாய் இருக்க வேண்டும்
நான்
அவள்
இறுக்கிப் பிடித்து
எழுதும் எழுதுக்கோலாய்
இருக்க வேண்டும்
நான்
அவள்
படித்து சிரிக்கும்
கவிதையாய்
இருக்க வேண்டும்
நான்
அவள்
துள்ளிக் குதித்து
ரசிக்கும் மழையாய்
இருக்க வேண்டும்
நான்
அவள்
கூந்தலை
அலைபாய செய்யும்
காற்றாக வேண்டும்
நான்
அவள்
தட்டிக் கொடுக்கும்
விசைப்பலகையாக
வேண்டும்
நான்
மேல் சொன்ன அவளாக
நீ வேண்டும்
உன்னவனாக வேண்டும்
நான்
காற்றில்
ஓவியமிடும்
உந்தன்
நெற்றியோர முடியில்
சிக்கி தவிக்கிறேன்
கலைந்த கனவை
விட்ட இடத்தில்
இருந்து தொடங்க விரும்புகிறேன்...