காலம் மாறிவிட்டது

வரும் பருவத்துக்கு பயிர்
எடுத்து வைக்க தானகாவே
மறந்து விடுகிறது

சும்மா இருக்கும் நேரங்களில்
தோப்பிற்க்கு
ஆள் உயர கள்ளிவேலியிட
தோன்றுவதில்லை

நான் நீச்சல் படித்ததே பெரிய விடயமென்று சிரிக்கிறான்
தென்னையெறச்சொன்ன
தம்பி மகன்

குடித்ததும் பிணி தொற்றாத
ஆரோக்கியப்பால்
வீட்டு கதவு பையில் கிடக்கிறது

கடைசி மண்பானை
கடந்த
போகிக்கு உடைப்பட்டு போனது

கடையில் வாங்கி குடித்து;
கை விட்டு எறிகையில்
எப்போதாவது
நினைவோடு வருகிறது
நுங்குவண்டி ஓட்டம்.

விடிய விடிய
புனையல் அடிப்பதோய்ந்து
ஒரு கையை நீட்டி
மணிக்கணக்கிலே
தந்து விடுக்கிறது நெல்
மணியை !

பாவம், இந்த அறுவடை இயந்திரத்தின்
வைக்கொல்மலத்தை
மாடுகளும் உண்ண - பழகிக் கொண்டன..

கலப்பை சுமந்து செல்லும்
உழவனை தினமும்
காண அழகாகத்தான்
இருக்கிறது!
இரண்டு தை
தப்பித்து விட்டது..
தொடர்ந்து இருக்க வேண்டும்
சுவற்றிலாவது உழவன் படம்

அடிக்கடி
இயற்கை சீற்றங்கள்
செயற்கையால்
வருகிறது என் உடலிற்கு

ஒவ்வொரு நொடியிலும்
தொட்டுத்தொடரும்
அதே பாரம்பரியம் தான்
இது, காலம் மாறிவிட்டது....

எழுதியவர் : (7-Jul-15, 10:57 pm)
பார்வை : 50

மேலே