காதல் தூதுகள்
கா த ல் தூ து க ள்
கொடியிலே பூத்த முல்லை
என்று உன் இடையினில் வருடிய தென்றல் சொன்னது....
மலரிலே உறிஞ்சிய தேன்தான் என்று உன் இதழினில் அமர்ந்த
வண்டுகள் சொன்னது.....
இரவிலே மலரந்திடும் நிலவு என்று உன் முகத்தினில் படர்ந்த கதிரவன் சொன்னான்...
பனியினிலே பூத்த தாமரை
என்று உன் பாதத்தை வருடிய
பைங்கிளி சொன்னது....
தேனினிலே மூழ்கிய திராட்சை என்று உன் செவ்விதழ் தொட்ட தேனீ் சொன்னது....
மதுவிலே கொஞ்சிய அமுதது என்று உன் மெல்லுடல் தழுவிய மருதம் சொன்னது.....
கனவிலே வருகிற காதலி
என்று உன் நிறத்திலே மயங்கிய
கவிகுயில் சொன்னது.....
மஞ்சத்திலே தவழும் தேவதை என்று உன்மடியில் தவழ்ந்திட்ட
வெண்பனி சொன்னது.....
மலரிலே வரைந்த ஓவியம்
என்று உன் அழகினில் மயங்கிய
நிலவு சொன்னது.....
மனதிலே வருடிடும் தூதுகள் சேதியால் உனை என்கைகள் கொய்தது என்கூந்தல் தழுவ......
என் ஆசை ரோசாவே!!!!!
பிரியமுடன்
அசுபா.....