எனக்கு இவள் மீது அன்பா ? காதலா ?

புத்தகமே !!!
நீ பெண் போல
இதமானவள்..; என்னை இதமாக்கியவள்..;

உன்னை நான் சில தருணம் "ஜான்சி ராணி "
என்றழைப்பேன் ; அது என்
மூதாதையர் கத்தியையும் பேனாவையும் ஒப்பிட்டபோது
தொடங்கி ; இப்போது வரை நிலைகொள்கிறது ;
என் மனதில் .... மதியில் .....

அச்சகத்தில் பதிப்பாகி
இச்சகத்தில் எல்லோர்க்கும் நல்வழிகாட்டுகிறாய் ....

ஒரு குடிகாரனின் மகனை
மாவட்ட ஆட்சியாலனாக்கிய போது....;
ஒரு மீனவனின் மகனை
விஞ்ஞானி யாக்கிய போது ...;
இன்னும் எத்துனை பேரை
நீ வாழவைத்த போது ....;
உன் புகழ் பாட, என்வசம்
வார்த்தைகள் இல்லை ...; வரிகளும் இல்லை ...;
நீயோ !!!
வரியை உருக்கொண்டு
அறிவை திறக்கிறாய் !!!!

நல்லறிஞர்களின் , நற்கலைஞர்களின் ,
கருத்துக்களை சுமந்துகொண்டு ,
பாமரனிடம் சேர்க்கிறாய் ;
அவனையும் அறிஞனாக மாற்றினாய் !!!

உன்னை பயின்றோரும்
இப்பூவுலகில் தவறு செய்வதுதான்
என்னால் தாங்க முடியவில்லையடி !!!

நீ பார்க்க உயிரற்று இருப்பாய் - ஆனால்
எனக்கும் பல மாந்தர்க்கும் இன்று
நீ அமைதியாய் உயிருடன் இருப்பது அறியும் ..;
உயிருள்ள நீ, உயிர்கள் காக்க ,
உம் மாசை தவிர்த்து ,
உயிரற்றது போல் காட்சிப்பிழையானாயடி !!!

பெண்ணே !
உன் முதல் பக்கத்தில் ;
உன் செம் முகத்தில் - முத்தமிட்டு
உன்னை என்னில் உணரப்போகிறேன் .....

உன் மீது
வெறும் அன்பா ???
இல்லை காதலா ???
எனும் குழப்பத்தோடு
தவிக்கிறேனடி !!
கள்ளியே !
செந்தமிழ்ச் செல்வியே !!

என்றோ ஒருநாள் நான்
உயிர்நீப்பது விதி !!
அன்று தொட்டு நான் ,
புழுவுக்கு இரையாகி ,
மண்ணுக்குள் உரமாகி ,
மரத்துக்கு உரிதாகி,
காகிதமாய் உருவாகி
நான் , நீயாய் மாறனுமடி !!!
என் உயிரே !!!

எழுதியவர் : தஞ்சை சித்திரக்குடி பிரப (16-May-11, 7:50 pm)
சேர்த்தது : PRABAKARAN
பார்வை : 448

மேலே