அல்லாஹுவை கொண்டே

அல்லாஹுவை கொண்டே !

துன்பமும் இன்பமும் நமக்கு தருவது
அல்லாஹுவை கொண்டே என்று நினை

இதை முழுமையாக மனதில் நிறுத்தி
அல்லாஹுவிடமே குறையை முறையீடு

அல்லாஹுவின் விருப்பத்தை கொண்டே
ஏதுவும் என்று நீ நம்புவதே என்றும் நன்று

இன்னும் நம்மை வழி நடத்தி செல்வதும்
அவன் நாடியதை கொண்டே என்று

அவன் நாடியதை தவிர நாம் ஏதையும்
பெறவும் முடியாது இனி

அவன் நாட்டம் இன்றி ஏதுவும் நடவாது
இன்னும் உலகில்

திருமறையில் ஒரு வசனம் இதோ
தெளிவுருவோமா நாம் இனி !

எந்தத் துன்பம் ஏற்ப்பட்டாலும் அல்லாஹுவின்
விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.
“அல்லாஹுவை நம்பும் உள்ளத்திற்கு அவன்
வழி கட்டுவான்.” அல்லாஹு ஒவ்வொரு
பொருளையும் அறிந்தவன்.

(அல் குர்ஆன்: 64:11)

கவிஞர்:இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (14-Jul-15, 6:18 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 43

மேலே