தர்மம் செய்யுங்கள்

தர்மம் செய்யுங்கள் !

இன்னும் அதிகமாக தர்மம் செய்யுங்கள்
அல்லாஹு உங்களுக்கு கொடுத்ததிலிருந்து

படைப்புகளில் இல்லை இறைவன் பாகுபாடு
ஏழை , பணக்காரன் என்று இது உலகில்

இன்னும் அல்லாஹுத்தாலாவால் உங்களுக்கு
கொடுக்கப்பட்டது இந்த செல்வம்

இதில் தர்மம் செய்வது ஒரு கட்டாய கடமை
செல்வந்தர் என்ற பெயருக்கு மட்டும் அல்ல

செல்வம் கொண்ட எல்லோருக்கும் கடமை
இன்னும் மரணம் நமக்கு வரும் முன்னே !

தெளிவான திருமறை வசனம் உண்டு
தெளிவு பெறுவோம் தர்மம் செய்வோம்

நமக்கு அல்லாஹு அளித்த பொருளிலிருந்து
தான தர்மம் செய்வோம் !

“உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே
நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து ,
தான தர்மம் செய்து கொள்ளுங்கள் ;(அவ்வாறு)
செய்யாது மரணிக்கும் சமயம்) “என் இறைவனே !
என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக்
கூடாதா ? அப்படியாயின் நானும் தான தர்மம்
செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக
ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

திருக்குர்ஆன் 63:10.

கவிஞர்.இறைநேசன்

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (14-Jul-15, 6:16 pm)
பார்வை : 210

மேலே