நோயற்ற உலகம் வேண்டும்

மருந்துகளால் சீவிக்கிறது மானுடம்
ஊசிகளால் உயிர்க்கிறது உலகம்
கவிதை எழுதிக் களைத்துத் திரும்புகிறேன்
வட்டமாய்க் கண்ணடித்துச் சிரிக்கிறது
வெள்ளை மாத்திரை..
சோர்வு நீக்குமாம்.
அலறியடித்து ஆகாசம் தேடுகிறேன்.
இயற்கைக்கும் எனக்கும்
இடைவெளி கொடுத்த இந்தப்
பயனுறு மருந்துலகம் பாழாய்ப் போவதெப்போ?
நோயற்ற உலகம் வேண்டும் - உரத்துக் கேட்கும்
ஒலிபெருக்கியின் குரல் கேட்டு வெடித்துச் சிரிக்கிறேன்..
நகைச்சுவையாய் இருக்கிறது போ..