தேவதை
வெளிர் நெற்றியில் பொட்டிட்ட உனைக் கண்டு
வான மகளும் இட்டுக் கொண்டாள்
நிலவெனும் பொட்டு......!
ஒவ்வொரு முறையும் உன்னிடம் போட்டியிட
நினைத்து முடியாமல் பூசிக்கொண்டாள்
அம்மாவாசை என்னும் கரியை.....!
காற்றின் சிலு சிலு சிணுங்கலும்
அமிழ்ந்தே போயின உன் பாதக்
கொலுசின் கிண் கிணி நாதத்தில்...!
உன் மச்சங்கண்டு நிலவிலும் உண்டானது கருமை
நிலவுக்கு அது களங்கமாகி போனது ...
உனக்கோ களங்கமில்லா உள்ளத்தின்
முத்திரையாகி போனது ......!

