யாரோ நீ
விழிகள் பேசும்போது
என் இமைகள் மூடியது
உன்
விழிகள் பேசும்போது
என் இமைகள் மூடியது.
உதடுகள் விரித்து
உமிழ்நீர் தெறிக்க
சத்தமாய் என்னை
நீ
சொந்தம் சேர்த்தபோது
ரோஜா இதழ் பட்ட
தீர்த்தமாய்
சேகரித்தேன் மௌனமாய்
ஸ்பரிசம் காணாமல்
ஸ்படிகம் போல நாம்
உள்ளே உள்ளே
எல்லாம் உள்ளே .
மௌனம் கொன்று
வார்த்தை விதைகளை
உள்ளே புதைத்து
மீண்டும் ஒரு நாள்
என்
விழிகள் பேச
உன் இமைகள் மூடும்.
கன்னம் ஓரம்
கண்ணீர் ஒரு துளி
கரைத்து வழியும்
என் நினைவுகளை
உன் முகம் முழுவதும் !