தடாகத் தாமரை - 3
தண்விரிப்பின் மையமதில் தங்குமிள வெண்கமலம்
விண்பறக்கும் செங்கதிரைக் காதலுறும் – பொங்குமிதழ்க்
கண்வழியே கண்டுகதிர் மண்வரவே செல்வழியில்
கண்மயங்கிக் காத்திருக்கும் நின்று.
(குளுமையான விரிப்பைப்போல் விளங்கும் நீரின் மையத்தில்
வீற்றிருக்கும் வெள்ளைத் தாமரை, வானத்தில் வலம்வரும்
செங்கதிருடையோனாம் சூரியனை விரும்பிக் காதல் செய்யும்.
அக்காதல் பொங்க, தமது இதழ்களாகிய கண்களின் வழியே
அச்சூரியனைக் கண்டு, அவன் நிலத்தில் தம்மிடம் தேடி வருவானோ
என்று அவன் செல்லும் பாதையை நோக்கி கண்மயங்கிக் காத்து நிற்கும்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

