வானவில்
வானவில்லே...!
நீ...! நிறத்தால் ஒன்றுபட்டு அழகாவது போல
என் தேச மக்களும் மதம் என்பதை கடத்து
மனதால் ஒன்றுபட்டு உயரட்டும்....
வானவில்லே...!
நீ...! மட்டும் நிலையாய் இருந்திருந்தால்
உலக அதிசயதில்
முதல் அதிசயமாய் மாற்றி இருப்பேன்
ஓ... நீ...
நிலையாய் இருந்தால் எம்மவர்கள்
உன்னை களங்கபடுத்தி விடுவார்கள்
என்ற பயமா?
ஆம்... அதுவும் அப்படியே தான்...
கவலைபடாதே நீ நிலையாய் இல்லாவிட்டாலும்...
எம் மனதில்....
நிலைத்துவிட்டாய்.....!