மழை

கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று
கலவி செய்வதால்- அதன்
வியர்வைத் துளிகளாய்
விரைந்து பார்தொட்டது
மழை......

வானின் சோகம் பூமிக்குத்தான்
தெரியும் அதன் கண்ணீர்
துளிகளாய் மண்ணில் விழ்ந்தது
மழை........

ஏழ்வண்ண ஆடைபோர்த்தி
எத்திக்கும் உருமி மேளமிட்டு
வீரென பாய்ந்து வந்து
விண்ணவன் உடல் குளிரச் செய்தாய்

மண்ணவர் உன்வரவு காண
மணமுடித்து வைத்தனரே கழுதைக்கு
மரித்துபோக வேண்டும் இவர்கள்
மதிபுகுந்த மூடநம்பிக்கை

அர்த்தமில்லா செய்கை கண்டு
ஆத்திரம் தான் கொண்டதனால்
அழிவைத் தரும் கனமழையாய்
அவலத்தை தருவாயோ?

மாதம் மூம்முறை பாரினிலே
மறவாது நீ வந்து
மனமெல்லாம் குளிரசெய்து
மங்கலங்கள் தந்திடுவாய்.....

எழுதியவர் : வேலணையூர் சசிவா (16-Jul-15, 9:52 pm)
சேர்த்தது : வேலணையூர் சசிவா
Tanglish : mazhai
பார்வை : 281

மேலே