உன் புன்னகையோடு விடைபெறும் போது...

உன்னிடமிருந்து
கண்ணீருடன்
விடைபெறும் போது கூட
காதலின் வலி
என்னை அதிகம்
அழ வைக்கவில்லை...
ஆனால்
உன் புன்னகையோடு
விடைபெறும் போது
மனதுக்குள்
ஒரு இறுதி ஊர்வலத்தையே
நடத்தி விடுகிறது.
உன் மீதான காதல்...

எழுதியவர் : சக்திநிலா (17-May-11, 3:35 pm)
பார்வை : 526

மேலே