வாந்திக்கா

என்னடி இது. கன்னடக்காரங்க தான் திம்மக்கா பொம்மக்கான்னு பேரு வச்சுக்குவாங்க. பட்டணத்திலே இருந்து வந்த பொண்ண எல்லாரும் வாந்திக்கா வாந்திக்கான்னு கூப்படறாங்க. அந்த் பொண்ணு கண்டதத் தின்னுட்டு அடிக்கடி வாந்தி எடுத்திட்டு திரியுமா? அதனால தான் அவள கிண்டலா எல்லாரும் வாந்திக்கான்னு கூப்பிடறாங்களா?

இல்ல பாட்டி அவ பேரு அவந்திகா. இப்பெல்லாம் சினிமா தொலைக் காட்சித் தொடர்களிலே வர்ற பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறத பெருமையா நெனைக்கற பெற்றோர்கள் 98% பேர் தமிழ் நாட்டிலே இருக்கறாங்க.

தமிழ் மொழிலே இல்லாத அழகான பேருங்களா மத்த மொழிகளிலே இருக்குதுன்னு கண்ட பேரப் பிள்ளைங்களுக்கு வச்சுத் தமிழக் கேவலப்படுத்தறாங்க?

-----------
மொழிப் பற்றை வளர்க்க.
அவந்திகா என்றால் வடமொழியில் அரசி என்று பொருள் . Queen

எழுதியவர் : மலர் (17-Jul-15, 10:11 pm)
பார்வை : 235

மேலே