காதலைத் தந்துவிடு

காதலைத் தந்துவிடு
அழகிய அரக்கியே
ஆள்கிறாய் அகிலையே
உன் அழகிய தீயில்
அழிக்கிறாய் ஆளையே
உன் காதலைத் தேடி
அலைந்தவர் கோடி
உன் இதயம் திருடும்
கள்வன் யாரடி
கானல் நீராடி
உன் காதல் காணவில்லையே
எனக்குத் தெரியவேண்டும்
பதில் சொல்லடி
என் நெஞ்சுக்குள்
உன் தஞ்சமே
உன் காதலுக்குப் பஞ்சமே
கருணைக் காட்டு - இல்லையேல்
உன் காதலைக் கூட்டு
முகத்தை மூடி -உன்
மனதுக்குள் சிரிக்கும் பெண்ணே
உன் மௌனத்தைக் கலைத்துவிடு
உன் மனதினைக் கொடுத்துவிடு
கணவனாகின்றேன் கன்னி உனக்கு ...
கௌதம்