டயரில் எலுமிச்சம் பழம்

டயரில் எலுமிச்சம் பழம் ஏற்றிய தேசத்து காரர்கள் நாங்கள். . .
நிலவில் ஆம்ஸ்டிராங் கால் வைக்கும் நேரம்
நிலவில் வடை சுடும் ஆயாவை காட்டி நிலா சோறு ஊட்டுகிறோம்.,
பூனை குறுக்கே வந்தால் நிதர்சனமாக வீடு திரும்புகிறோம்.,
வீடு திரும்பினால் வீட்டில் மனைவியின் விளக்குமாறு சண்டை
திருஷ்டி பொம்மைகளை வீட்டில் கட்டுகிறோம்., திருஷ்டி பொம்மை செய்பவன் வீட்டில் ஆயிரம் திருஷ்டி பொம்மை இருந்தும் கடன்காரன் வாசல் தட்டுகிறான்
பிணங்களையும் அஸ்தியையும் கலக்கி நதியை நாசமாக்குவோம் அதே நதியில் புனித நீராடுவோம்
அறியாமை என சொன்னால் மறுப்போம் ஆயுதம் ஏந்துவோம். .
இன்னும் எத்தனையோ நடைமுறைகள் சிந்திக்காமல் உள்ளோம் சிந்தனை புகுத்துவோனையும் சிதைக்க உள்ளோம் .. . . .

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (18-Jul-15, 10:47 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 107

மேலே