தலைக்கவசம் உயிர்க்கவசம்

மக்களின் பாதுகாப்பே இச்சட்டத்தின் நோக்கமெனில்
சாலையின் தரத்தின் பாதுகாப்பை வேண்டுவோமெனில்
அதன் பொறுப்பை உடனே ஏற்பாருண்டோ?
தரமற்ற சாலையில்லாமல் பயணம் உண்டோ?

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதானே
குடிக்கத் தூண்டுமளவிற்கு கிடைக்கச் செய்வதும்
அதைத் தடுக்க இயலாமல் திணருவதும்
அரசின் இயலாமையை எடுத்துக்காட்டுதுதானே!

போதுமான கவசங்கள் கிடைப்பதை உறுதிசெய்யாமல்
வேகமான சட்டம் கருதிமட்டும் அமலாக்காமல்
நிதானமன பல்நோக்கு வழியில் திட்டமிட்டாமல்
இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாமோ என எண்ணியிருக்கலாம்..!!!

உன் தலையில்மேல் அக்கறைப்பட
அரசு தலைமையில் சட்டமிட
நீதிமன்றத்தில் சென்று முறையிட
விதிவிலக்கின்றி தலைக்கவசத்தை கட்டாயமாக்கிவிட!

அலைப்பேசித் திரைக்குக்கூட கீறல் தடுப்புக்கவசம்
விலைமதிப்பற்ற உன்தலைக்கு வேண்டாமா கவசம்!
வியர்வைக்காக அணியாமல் இருக்க தயக்கம்
குருதி வழியுமானால் அதுஉயிரையே எடுக்கும்!

விதிகளும் சட்டங்களும் மக்களின் பாதுகாப்பிற்கே
மதித்து நடப்பதும் மீறி ஓடுவதும்
அவரவர் விருப்பத்தில் சேராது போக்கிற்கே
எவரவர் கருமத்தின் வினையாய் நாடுவதும்!

தலைக்கவசம் உன் உயிர்க்கவசம்தானே
அதை அணிவதில் தயக்கம் ஏனோ?
விபத்துக்குள்ளாகி விழுந்தபின் புத்தி வருமோ
இதை வருமுன் காத்திட அணியலாம் தானே..!

எழுதியவர் : அலெக்சாண்டர் (18-Jul-15, 10:16 pm)
பார்வை : 933

மேலே