பெண் மலரே

நான்
மலர் என்பதால் -என்
இதழில் முத்தம் இடுகிறாய்
உன் இதயம் நான் அறிவர்தற்குமுன்னால்!
====================
சுதந்திரமாக
சூரியனை பார்த்த என்னை
'நிழல்' தருகிறேன் என்று -என்
நிஜத்தை மறக்க செய்துவிட்டாய் !
======================
தோட்டத்து மலரான என்னை
தோல் சேர்த்து கொள்கிறேன் என்று
'தனி' மலராக்கி விட்டாய் !
=====================
'காதல்' என்ற ஒற்றை சொல்லால்
என்னை மஞ்சத்தில் சேர்த்து - என்
மணத்தினை உறிஞ்கிவிட்டாய்!
========================
இப்படி ,
மலர்ந்து, காயாகி, பழமகா
வேண்டிய என்னை
மலரிலேய கசக்கி மலடியாக்கிவிட்டாய் ,
காரணம் நான் மெல்லினம் என்பதால்..................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (18-Jul-15, 7:39 pm)
Tanglish : pen malare
பார்வை : 104

மேலே