நினைகின்றவை

ஒழிந்து கொண்ட தென்றல்
ஓய்வு எடுக்க கேட்ட நிழல்

மௌனத்தில் இசைபாடும் மல்லிகை
மன்றத்தில் நடைபோடும் கிளிகள்

சத்தம் கொடுக்காத பாம்பின் நடனம்
சந்தையில் கிடைக்காத வெண்பனி முத்துக்கள்

நிற்க முடியாத நீரோடைகள்
நீந்த தெரியாத மழைத்துளிகள்

காத்தால் இடம் மாறும் சருகுகள்
காடைக்கு கண் தெரியாத இரவுகள்

நீர்கொட்டும் பாறையில் இடம் தேடும் பாசிகள்
நீராவியை சிறைபிடித்த மேகங்கள்

எந்த கடையோரமும் விற்காது அன்பு
எந்த மனிதராலும் நிறுத்த முடியாது இறப்பு

எழுதியவர் : காந்தி (20-Jul-15, 10:55 am)
பார்வை : 85

மேலே