வயிறிற்கு சோறு தருபவன்
வறுமை
அரசியல் வாதிக்கு
தேர்தல் பிரச்சாரம்
எழுதுகிறவர்களுக்கு
காகித லட்சியம்
சினிமாகாரனுக்கு
திரை ஓவியம்
முன்னவனுக்கு
நாற்காலி தேடல்
பின்னவர்களுக்கு
பரிசு பூச்செண்டு தேடல்
உதவிக் கரம் நீட்டி
ஏழை வயிற்றுக்கு
சோறு தருபவன்
உண்மையில்
சமூக சேவகன் .
----கவின் சாரலன்