முலைகள் - வைரா சிறுகதை
அடி ஆத்தி என்னய்யா இப்படி பாக்குறே
இந்தாய உன்னயத்தான் ...
பல்லு போயி பணியாரதை உதப்பி தின்கிற வயசுல ....என்ன பழைய முறுக்கு மீசை மாரின்னு நினப்போ ......என
வெத்தலைய இடிச்சுகிட்டே கால நீட்டி குத்த வச்சு ஒரு பக்கமா உக்கார்ந்து கிட்டு , லவிக்கை போடாத சேலைக்கு வெளியே சுருங்கி போன தோலோட காம்பு தெரிய தொங்கிய முலைகளை சட்டை பண்ணாம கேட்ட மருதாயி கிழவியையே உற்று பார்த்து கொண்டிருந்த மாரி கிழவன் பழைய ரோசனைகளில் மூழுகிபோனான் .....
மருதாயிக்கு 15,16 வயசிருக்கும். அப்பவெல்லாம் மருதாயிக்கு ஏகப்பட்ட கிராக்கி இளசுக மத்தியில . சுமாரான கலரா இருந்தாலும் அச்சில் வார்த்த சிலை மாதிரி இருப்பா மருதாயி. அதிலும் இந்த மாரி பயலுக்கு ஏகப்பட்ட கிறுக்கு மருதாயி மேல . ஒரே ஊரு, ஒரே சாதி சனாமா இருந்தாலும் அவகிட்ட சாட மாடயாதான் பேச முடியுது ...
மாரியும் லேசுப்பட்ட ஆள் இல்ல சுத்து வட்டாரத்துல .அதிலையும் முறுக்கு மீச மாரியின்னா எட்டு கண்ணு விட்டெரியும் .
நாப்பதடி பனமரமா இருந்தாலும் மாரி ஏறிட்டா அரை நிமிசத்துல நுங்கு சுளை .....
வரப்பு வெட்டி ஒதுக்கிரதுல மாரிய மிஞ்ச யாராலும் முடியாது ..
மஞ்சு விரட்டுல மாரி அடக்காத காளையே இல்ல ...
அப்பேர் பட்ட காளைய அடக்கி போட்டவ மருதாயி ...
எப்ப பாத்தாலும் மருதாயி பின்னாடியே திரிவான் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு ....
மருதாயி கருவ காட்டுக்கு சுள்ளி பொறுக்க போவாள் .இவனும் அருவாள எடுத்துக்கிட்டு மரம் வெற்ற சாக்குல கிளம்பிருவான் ...அங்க போய் சும்மா இருக்க மாட்டான் .மருதாயி குனித்து சுள்ளி பொறுக்கையில் சேலை மாராப்பு விலகி கட்டி வைத்த மாங்கனிகள் மாரியை கிறங்கடிக்கும் .மூச்சுக்கு முன்னூறு தடவை மராப்புவை சரி செய்து கொள்வாள் .
ஒரு கட்டத்துக்கு மேல
"இந்தா உனக்கு வேற வேலையே இல்லையா"
"எனக்கு ஏது புள்ள வேல ..நீ எதாச்சும் வேல குடுப்பியானு பாக்குறேன் "
"என்ன பேச்சு ஒரு மாதிரியா போகுது .எங்கபனுக்கு தெரிஞ்சா ராவிபுடுவாக "
"ஐயே இவுக அப்பன் ரவுற வரைக்கும் எங்க கைக பூப்பறிக்கும் "
"சி போ நீ ஒரு மனுஷன் "...
என்னதான் வேண்டா வெறுப்பா பேசினாலும் மருதாயிக்கும் மாரி மேல ஒரு இதுதான்..
இதுதான்னா அதுதான் ....
ஒரு வாட்டி இப்படிதான் கம்மா கரையில குளிக்கையில ..
ஒத்த கைல பாவடைய புடிசுகிட்டு மஞ்ச தேய்கையில தண்ணி பாம்பு ஒன்னு பக்கத்துக்கு வர ...வீல்ன்னு கத்திகிட்டு கைய விட ..
அத்தன நாள் மறைச்சு வச்சிருந்த சிதம்பர ரகசியம் பொலக்குன்னு வெளியே வந்து விழ ....மாரி அப்படியே சொக்கி போய்ட்டான் ...
சுதாரித்த மருதாயி வெக்க பட்டுகிட்டே ஈரத்தோடு ஒடிவிட்டாள்.
அன்னையிலிருந்து மாரிய பாத்த வெக்க பட்டு ஓடி ஒளிந்து கொள்வாள் .ஏறக்குறைய மாரி கண்ணிலே பட மாட்டாள் .
கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு .
முதல் இரவில்,
"இத பாத்ததுக்குதான் ஓடி ஒளிஞ்சியா"
இப்ப எங்க ஓடி ஒளிவே"
இன்னக்கு பூராம் பாத்து ரசிக்க போறேன் ..
சி போ என கைய வச்சு மூடி கொண்டவளை கட்டி அணைத்து கொண்டான் .
முத புள்ள பெத்த பின்னாடி ...
"இந்தருயா புள்ளைக்கு கொஞ்சம் பால் மிச்சம் வையா "
மார்பை சுவைத்து பால் குடிப்பதில் குழந்தையாகவே மாரி விடுவான் மாரி ..
செல்லமாக கடிந்து கொண்டாலும் மாரி சுவைத்து குடிப்பதில் மெய் மறந்து போவாள் ..
யோவ் .....
என்ன பகல் கனா காங்கிரியா ..மருதாயி கிழவி கத்த
உடனே சுயநினைவுக்கு வந்தான் மாரி கிழவன்
வயசுன்கிறது உடம்புக்குதானோ ...சரியாதான் போச்சு மாரி கிழவன் தனக்குள்ளே முனுமுணுத்துக் கொண்டான்.
அங்கெ என்னய்யா முனுமுனுப்பு
பேத்தி குட்டி பாமா காலேசு விட்டு வர்ற வழியில யாரோ பசங்க வம்புளுக்குரான்கலாம் ..நீ போய் கூட்டி வாய்யா..சரி கிளம்பு ...
பாமா அவுக பாட்டி மாதிரியே வனப்ப இருப்பா ..
பேருந்து நிலையம்
மச்சி செம structure டா
அவர்கள் ஆங்கிலத்தில் எதோ சொல்கிறார்கள் பாமாவை பார்த்து ...
ஆனால் என்ன சொல்லி இருப்பார்கள் என்று புரிகிறது ...
ஏன்ன நாங்க பாக்காத தக்ச்சரா என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே ....
வாமா பாமா போலாம் ....
-----வைரா