இனிய வரவேற்பு கவிதை

இனிய
இனிமையான
இன்பமான
இல்லத்தில்
இறையருள்மிக்க
இல்லறவாழ்க்கை
இன்றும் என்றும்
இறையருளால்
இடையூறுகள் நீங்கி
இன்பமே
இடைவிடாமல் கிடைக்க
இந்தநாள் மட்டுமல்ல
இதயத்துடிப்பு உள்ளவரை
இன்பலோகத்தில் வாழ
இந்த
இனியவனில்
இதயம் கனிந்த
இனிய வணக்கம்
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள்
இறைவன் விரும்புவதும்
இவ்வுலகில் எல்லோரும்
இன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jul-15, 7:53 am)
பார்வை : 285

மேலே