குளிர் நிலவு

அந்திமச் சூரியனின்
ஆரஞ்சுக் கிரணங்கள்
இனி இல்லை என
ஈற்றுப் போகும் வேளையில்
உள்ளம் தளர்ந்து மிக
ஊக்கம் குறைந்த போது
என் ஏகாந்தத்தைக் கலைக்க
ஏனிங்கு வந்தாய் சுந்தரனாய்
ஒன்றுமறியா சிறுவனாய் வானில்
ஓரங்க நாடகம் நடத்தி மனதிற்கு
ஔடதமாய் குளிர் சந்திரனே
எஃகு மனதையும் இளக்கிடவோ....?
------ முரளி

எழுதியவர் : முரளி (21-Jul-15, 10:19 am)
Tanglish : kulir nilavu
பார்வை : 1117

மேலே