நான் அறிந்த நாடோடிக்கூட்டம்
சொத்தென்று சொல்லிக்கொள்ள
ஏதுமில்லை இதுவரை..
ஆனால்
தனியொருவனுக்கு சொந்தமில்லாதது
எங்களுக்கு சொந்தம்.
**************************
பிஞ்சையும் பாழாக்கும்
சில இராவணன் வாழ்வுக்கு
அசுத்தமே துணையாகும்
எங்கள் அழகு பெண்களுக்கு..
****************************
கல்வியில் கருணை காட்டும் அரசு
வாழ்வில் வழிகாட்ட மறந்தது-அதான்
வறுமை எங்களிடத்தில்
வசதியாய் வாழ்கிறது..
****************************
வயிற்றுக்கே வாய்ப்பில்லாதபோது
வாய்பிளக்க மறுக்கும் செவியால்
விதிக்கு வாய்ப்பளித்து
மதியை வேண்டாமென்று
விட்டுவிட்ட வாழ்வு
வீணான எங்கள் வாழ்வு..
******************************
காலாற நடக்கையிலும்
மரக்கிளை ஊஞ்சல் ஆடயிலும்
காற்றுக்கு அணைகட்டி சமைக்கையிலும்
தெரியவில்லை
நாங்கள் அரசாங்கத்தால்
அனாதையாக்கப்பட்ட குடும்பம் என்று..
******************************
இயற்கை இச்சையால்
உயிர் பிறந்தபோது
மாத்துதுணி தேடி
மனிதன் துணை நாடி
மண்டையிலே உரைத்தது..
மனிதனில் மனிதம் இல்லை
மாறவேண்டியது நாங்கள் தான்..
வருங்காலம் வளமாக
மாற்றவேண்டியதும்
நாங்கள் தான் என்று..
********************************
குறிப்பு:
அறியா வயதில் நோக்கியது..
அர்த்தம் புரியும்போது வலித்தது..
இன்றும் வலிக்கிறது
இவர்களை காணும்போதெல்லாம்..