உறவு தன் உயிலை எழுதி விட்டது

கண்ணீர் சுமக்கும் என்
கவிதைகளெல்லாம் காலத்தை வெல்லட்டும்
அது ஊர்வலம் போகும்
பாதையெங்கும் உன்னைச் சொல்லட்டும்.

என் கவிதைகள் எல்லாம் சேர்ந்து
என் சவ ஊர்வலத்தையா நடத்துகிறது
நீ இத்தனை மௌனமாய் இருக்க.

நான் இறந்து போனால்
எல்லோரும் அமைதியாகச் செல்லும்
என் சவ ஊர்வலத்தில்
சத்தமிட்டு அழுவதற்கு உனக்கு மட்டும்
சம்மதம் தருகிறேன். போ....

இந்த ஜென்மம் தொலையட்டும்
உன் வன்மம் குறையட்டும்
மறு ஜென்மம் எடுப்பேன் நான்
உன் மகனாய் பிறப்பேன் நான்

நான் இதழ்களை மூடுகின்றேன்
நீ செவிகளில் கேட்கின்றாய்.
நான் கண்களை மூடுகின்றேன்
நீ மனதுள் சிரிக்கின்றாய்.
நான் உயிர் பிரியும் முன் சிரிக்கின்றேன்.
நீ பிரிந்த பின் அழுதிடுவாய்.

ஒரு வேளை உனக்கு முன்
நான் இறக்க நேர்ந்தால்
உனக்கே மகனாகப் பிறப்பேன்.
இந்த ஜென்மத்தில் கிடைக்காத அன்பை
மறு ஜென்மத்தில் கேட்டு அடம் பிடிப்பேன்.

வருவேன். ஒரு மறு விடியலில்......

எழுதியவர் : parkavi (20-Jul-15, 9:11 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 125

மேலே