ஒட்டக நிழல்

நாட்டுப்புறத்துச் சேறு கதிரறுப்பு
நகர்புறத்து சகதி அருவருப்பு -
மண்ணோடுதான் மனிதமனம்
சாதிகள் பேசும் நகரத் தேர்தல்
நெகிழிக் கோப்பை உலவும்
கிராமத்துத் தேநீர்கடை
தூரத்து தொடுவானம் அழைக்கும்
விளைநிலத்தில் விழப் போகும்
ஒட்டக நிழல்கள்