முதல் முத்தம்
இதயத்துடிப்பின் வேகம்
இளவஞ்சியின் படபடத்த தேகம்
இருவரையும்
தீண்டிய குளிர்காற்று
இன்றியமையாத நாணம்
இதழருகே நெருங்க
இருதயம் மெதுவாய் நொருங்க
இறுக்கி மூடிய விழிகள்
ஈருடலும் பிணைய
உச்சியில் இட்ட முத்தத்தில்
மூச்சிக்கற்று பெரும் சத்தமிட
மூவுலகில் அடையாத
மகிழ்வைத் தொட்டது
முதல் முத்தம்