உனது கடமை

பிறந்த நாடும் சொந்தமில்லை
வாழ்ந்த நாடும் சொந்தமில்லை
இறந்த பின்னும் எமது உடல்
மாற்றான் நாட்டில் அடக்கம்

அனைத்தவனும் இங்கில்லை
அனைப்பதற்கு கையுமில்லை
ஓடி ஓடி உழத்தோம்
உயிர் கொடுத்தும் உழைத்தோம்
ஒன்றுமில்லை தமிழனுக்கு
ஒன்றுமில்லை

மனிதா உன் பயணத்தை மாற்று
அது உனக்குரியதல்ல
உனது தோன்றலின் கடமையாற்று

எதிலியாய் வாழ்ந்து
ஏளனத்துக்கு ஆழாகதே
மாற்றங்களைக்கண்டு
மனமுடையாதே
மரணம் கண்டு கடமையை மறவாதே

இனம் நலம் பெற கொடிதை ஏந்தல்
கொடியதல்ல
கொடியாதால் கொடியானை
கொல்லல் கொலையுமல்ல
உனது கடமையாற்று

குற்றம் புரிந்தோர்
குளு குளு அறையயில் வாழ்கிறான்
குற்றமுடைய எழுந்தவன்
முடங்கி வாழ்கிறான்

வாய் சொல்லை ஏமாற்றி
எழுதுகோலை உடைத்தெறியும் சனநாயகம்
நாம் விடும் மூச்சுக்கும் கூட அனுமதி
பெற வேண்டும் இது என்ன நியாயம்

கோழைத் தமிழனே!

நாம் சொல்வது உமக்கு கோமாளியாகிறதா?

வெகுண்டெழுந்து வா
வேந்தர் படையாக
வெந்தது போதும்
வெகுண்டெழுந்து வா

தயக்கம் உனக்கிருந்தால்
தாயகம் உனக்கில்லை

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (22-Jul-15, 1:07 am)
Tanglish : unadhu kadamai
பார்வை : 554

மேலே