இந்திரஜால தந்திரம்பூண்டு ம்ம்ம்ம்

இந்திரசா(ஜா)ல தந்திரம்பூண்டு ம்ம்ம்ம்!!!
=====================================

சீமுதன் நோக்கலின் நச்சுதல்==========
======ஞேயமுஞ் சோணைதம் பொழியுதே
பிற்றையின் புகலலின் பீதியில்========
======பின்னவர் புக்கலின் பிறங்கலேன்
நுனிதொடா நுசுப்பிடை முட்டலில்====
====== காவியம் புனைதலும் மார்க்கமே

யாதனை யருகிய வுழியிலே=========
======வாயச மோரைக ளுரைக்குமே
முழவொலி யொடுங்கிய களத்தினில்=====
======பையலும் பெருகுதல் நீங்குமே
வாம லோசனை வீழ்தலில்============
=======நீலா வேட்புமதில்களுஞ் சாயுமே

வெறுக்கை தூண்டிலிற் சிறைபட=======
======வேட்கையின் நாடகம் முகிந்ததே
ஒண்மையாய்க் கருதிய வதகமும்======
=====மதர்ப்பிற் கதராய்ப் போனதே
கண்பட லகற்றினா ளெண்மையாய்=====
=====கண்மையிற் றெண்ணீ ர்ச் சிதறவே

மஞ்சன முளரிடுங் குடங்கரில்=========
=====கொஞ்சுத லஞ்சன மெஞ்சுதே====
துவளலி லிடத்திய கிடத்தலில்=========
=====உடங்கலின் சடங்குகள் முடங்குமே
மஞ்சிகை யுரசிய கொள்ளலில்=========
=====சுரதமுஞ் சரண்பட அஞ்சுமே

துகிலிகை யிழையினள் வருடலில்=====
========மாரக முவகையில் நீளுதே
பொய்கதிர் முந்தியோ ரிரட்டலில்=======
=====அரணது விரணெனச் சாய்ந்ததே
தொய்யலில் நெய்யலா யிறுகியே====
=======மையலில் பையுளைத் தந்ததேன்

சயனத்தி லங்கைக ளிணையவே=======
======சரிதைக ளெழுதிட விரையுதே
தரங்கதி லரங்குபோ லிறங்கியே========
====அரம்பையா ளங்கனந் தோன்றவே
இதலையி லிடர்ப்படத் தழுவினேன்=========
======மயிர்முடி மறைகளைச் செப்பவே

======அனுசரன்=======

எழுதியவர் : அனுசரன் (22-Jul-15, 3:19 am)
பார்வை : 98

மேலே