இப்படியாக கவிதை - சந்தோஷ்

சூரியன் தன்
ஒளிக்கைகளை விரித்தப்போது
என் கவிதை சொன்னது
”பகல் குழந்தை பிறக்கிறது “

சூரியன் தன்
ஒளிக்ககைகளை அந்தியாய் மடக்க
என் கவிதை சொன்னது
”இரவு ஜீவன் பூப்படைகிறது ”

சந்திரன் தன் முழு முகத்தை
காட்சிபடுத்தும் போதெல்லாம்
என் கவிதை சொல்லும்
"நிலவின் வீட்டில்
கல்யாண வைபோகம் ."

சந்திரன் தன்னை அமாவாசையாக
பிரகனப்படுத்தினால்
என் கவிதை சொல்லும்
"வெண்ணிலா மாநிலத்தில்
மின் பற்றாக்குறை "

என் கவிதை எப்போதும்
என்னையே எனக்கு
வினோதமாக செய்துக்கொடுக்கும்.
ஏனெனில்,
என் கவிதைக்கு
தமிழ் தெரியும்
எனக்கு தமிழ் புரியும்.
**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (22-Jul-15, 1:37 pm)
பார்வை : 219

மேலே