கனவு

எப்போது விடியும் என்ற எதிர்ப்பார்ப்போடு
வானில் தெரியும் நிலவை
வெட்டவெளியில் படுத்து
வெறுக்காமல் பார்த்துகொண்டு இருந்தான்....
விடிந்தால் வண்ண விளக்குகளோடும்
வளைத்து வளைத்து கட்டபட்டிருக்கும்
மாவிலை தோரனங்கலோடும்
திருவிழா கோலத்தில் திளைத்திருக்கும்
தன் கிராமத்தை காணவும்.....
கடந்து போன திருவிழாவில்
தனதாக்கி கொள்ள முடியாமல் போன
தான் கண்ட விளையாட்டு பொருளை-இன்று
தன்னுடைய சொந்தமாக்க
தான் சிறிது சிறிதாக சேர்த்து வைத்து
பெருமளவில் சேர்ந்த பணத்தில்
பொருளை வாங்க போகிறோம் என்ற
பெருமகிழ்ச்சி களிப்பிலும் அந்த
நிமிடத்தை எதிர்நோக்கியும்...
விடிந்தது பொழுது......
கடை சென்றான் கனவோடு
கண்ட பொருளை வாங்கபோகிறோம் என்ற நினைப்போடு
கடையை அலசியும் கிடைக்கவில்லை தான்
கண்ட பொருளின் சாயலையும் அவன் பார்க்கவில்லை.....
கலைந்த கனவோடு கடையை
கடந்து போக எண்ணும்போது
தன்னை போல ஒருவன்
தான் கண்ட பொருளை வாங்க முடியாமல்
கனவுகளோடு செல்வதை கண்டுகொண்டான்....
கனவு களைந்து தான் உணர்ந்த வலியை
அந்த சிறுவனும் அடைய அவன் விரும்பவில்லை
தான் சேர்த்த பணத்தில் அவன் விரும்பிய
பொருள் வாங்கினான் களைந்து கொண்டிருந்த
அந்த சிறுவனது கனவுக்கு உயிர் ஊட்டினான்....
எப்போது விடியும் என்று ஏங்கிய பொழுது
இப்போது அடங்கியது.....
வாழ்வில் கனவுகளை காண்பதை விட
மற்றவர்களின் கனவுகளை நினைவாக்குவதே
சிறந்தது என்பதை அந்த சிறுவனுக்கு உணர்த்திவிட்டு..........