புதிய சரித்திரம்

நிஜங்களுக்கு அப்பாற்பட்டது
நான் படைக்கப்போகும்
புதிய சரித்திரம்.......
உறவுகளால் உதிரப்பட்ட
உதிரிப்பூ ஓன்று
மாலை தொடுக்கப்போகிறது
இது மாயாஜாலமல்ல
மனமிருந்தால் மார்கமுண்டு
இது எப்படி சாத்தியம்
என்கிறீரோ !
என்னால் முடியும்
என்னை ஏசிய உலகத்தை
என்னிடம் யாசிக்கவைக்கப்போகிறேன்..........