கரை ஒதுங்கிய காகித கப்பல்

கோழி வரைந்த
கிறுக்கல்களில் உணவு தேடும்
கோழிக்குஞ்சு...
****
தரை ஒதுங்கிய
ஆடை
நெஞ்சில் சிராய்ப்போடு..
****
சன்னலோர பயணம்
தென்றலுடன் என் காதலை
கெடுக்கும் தூசி
****
மூச்சிமுட்டியும்
இறக்கவில்லை
குழந்தைகளின் பொம்மைகள்
****
அம்மாவின் சேலையை
அணிந்து கொண்டது
தலையணை...
****
முதிர்ந்த காதல்
கைகூடியது
இலையும் நிலமும்..
****
பால்காரரை பார்த்ததும்
வேகமாக கத்தும்
பூனை குட்டி...
****
நொருங்கிய வளையல்கள்
நினைவுக்கூறுகிறது
நேற்றைய விபத்து...

எழுதியவர் : (23-Jul-15, 8:23 am)
சேர்த்தது : சத்தியதாஸ்
பார்வை : 184

மேலே