கார்ப்பரேட் சித்தன்

வேகமான வளர்ச்சின்னா என்னப்பா?
என்றான் நண்பன்!

கிராமங்கள் நகரங்களாவதும், நகரங்கள்
நரகங்களாவதும் தான்! – என்றான்
கார்ப்பரேட் சித்தன்.

சந்தேஷ் நாராயணன்

————————————–

வலை பாயுதே…

டீச்சர்:
பசங்களா…பிரிட்டானியா டைகர் பிஸ்கட்ல,
பின்னாடி பச்சைக் கலர் புள்ளிக்கு அர்த்தம்
சொல்லுங்க..!

மாணவன்:
டைகர் ஆன்லைன்ல இருக்கு!

karnal 4793

—————————————–

காது குத்தியதில் இருந்து அழுகிறாள்
ஏழைச்சிறுமி, கம்மல்ளா கேட்டு..!

Alien 420

——————————————-

மொட்டை ராஜேந்திரன் மாதிரி, நமக்கு
வில்லனாக அறிமுகமாகும் அப்பாகள்,
பேரன்களுக்கு காமெடி ஆரம்பித்து
விடுகிறார்கள்!

sundar tsp

——————————————–

போன தலைமுறை பெண்களுக்கு கோபம்
என்பது கண்ணீர்தான்!

mekalapugazh

———————————————

எப்பவுமே சைக்கிள்ல போனா, கேவலமாத்தான்
பார்ப்பாங்க…கொஞ்சம் நாள் கார் /பைக்ல போயிட்டு
அப்புறம் சைக்கிள்ல போனா, பையன் ரொம்ப
சிம்பிள் னு சொல்வாங்க..!

kavintamizh

எழுதியவர் : முகநூல் (23-Jul-15, 6:32 pm)
பார்வை : 220

சிறந்த நகைச்சுவைகள்

மேலே