கடவுள் சொல்லைத் தட்டக் கூடாது
நண்பர்கள் மூவர் எப்போதும் இணைபிரியாமல்
இருப்பவர்கள். அவர்களுக்கு ஒருவர் ஒரு அல்வா
துண்டு வழங்கினார்.
–
மூவரும் சாப்பிடும் அளவு இல்லை. ஒருவர்தான்
சாப்பிட முடியும்.
–
மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். இதை
ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டுத் தூங்குவோம்.
மூவரில் யாருக்கு அற்புதமானகனவு வருகிறதோ
அவருக்கே இந்த அல்வா துண்டு என்பதே அந்த
முடிவு.
–
இரவு என் கனவில் கடவுள் வந்தார். …என்னை
அழைத்துக் கொண்டு போய் உலகம் முழுமையும்
சுற்றிக் காண்பித்து வந்தார் – என்று ஒருவன்
சொன்னான்.
–
அடுத்தவன், என் கனவிலும் கடவுள் வந்தார்…
அவருக்கு என் திறமைகளைக் காட்டினேன்…அசந்து
போய்விட்டார்-என்றான்.
–
மூன்றாமவன், என் கனவிலும் கடவுள் வந்தார்.
ஏ முட்டாளே அல்வா துண்டை எறும்பு தின்பதற்குள்
நீ தின்று விடு என்றார்.
கடவுள் சொல்லைத் தட்டக் கூடாது என்பதால்
அல்வாவைச் சாப்பிட்டு விட்டேன் என்றான்…!
நன்றி ;முகநூல்