வாழ்க்கையைத் திருப்பும் அந்த சில நொடிகள்
பரபரப்பான காலை நேரம்
மீதிவயிறை நிரப்ப நேரம் இல்லாமல்
கடிகாரத்தின் ஓட்டத்தின் துரத்தலில்
வழியில் விபத்தில் விழுந்துக் கிடப்பவரைக் கூட
கவனிக்க முடியாமல் விரைந்து
மேட்டுகுழிச் சாலைகளில் லாவகமாய்
இரட்டைசக்கர வாகனத்தை செலுத்தி
வேலைக்குச் செல்லும் வழியில்
சாலை சமிக்ஞை நிறுத்தங்களில்
பச்சை விளக்கிற்காய் காத்திருக்கும்போது
அளவான ஆடையோடும்
நேர்கொண்ட பார்வையோடும்
பண்பட்ட நடையோடும்
கனிவான முகத்தோடும்
இலட்சணங்களின் பொருத்தத்தோடும்
அழகின் அர்த்தத்தோடும்
ஈர்ப்பின் ஆழத்தோடும்
மணமாகாத அடையாளத்தோடும்
அங்குப் பெண்ணொருத்தி
அச்சாலை வழியே
சிலநொடி நேரத்தில்
கடந்துபோக நேரும்!
மணமாகாத அவனும்
அவனின் மனமும்
அவள் பின்னே
செல்வதைப் பொறுத்தே
அவர்கள் வாழ்க்கையில்
திருப்பமேதும் வரக்கூடும்!
இதோ,
பச்சை நிறம் மாறிவிட்டது!
பயணத்தையும் வாழ்க்கையையும்
மாற்றும் அந்த
சில நொடிகள் தொடங்கிவிட்டது!