சொல்ல துடிக்குது மனசு

எவ்வளவு காலங்கள்

உன்னை பின் தொடர்கிறேன்.

உன்னை கடந்து செல்லும்

ஒவ்வொரு வினாடிகளிலும்,

என் காதலை

சொல்லிவிட துடிக்கிறேன்.

காலத்தின் கோலம்

ஒவ்வொரு முறையும்

தோற்றுப் போய் விடுகிறேன்.

இம்முறை எப்படியாவது

சொல்லிவிட வேண்டும்.

இதோ நெருங்கி விட்டேன்

கடவுளே....

தைரியத்தை கொடு.

இதோ கடந்து

செல்லப் போகிறேன்.

இம்முறையும்

காலம் என்னைப் பேசவிடாமல்

இழுத்துச் சென்றது.

சின்ன முள்ளை காதலிக்கும்,

கடிகாரத்தின் பெரிய முள்ளாகிய

என்னை.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (26-Jul-15, 10:11 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 106

மேலே