ஜாதி

பானையை உடைத்தேன்
பானை செய்ய சொன்னார்கள்
தெரியாது என்றேன்
நீ என்ன ஜாதி என்றார்கள்..??

ஆடையை கிழித்தேன்
நெய்யச் சொன்னார்கள்
தெரியாது என்றேன்
நீ என்ன ஜாதி என்றார்கள்..??

நெல்லை கீழே சிந்தினேன்
விவசாயம் செய்ய சொன்னார்கள்
தெரியாது என்றேன்
நீ என்ன ஜாதி என்றார்கள்..??

மரபொம்மையை கை தவறி முறித்தேன்
மரவேலை செய்ய சொன்னார்கள்
தெரியும் என்றேன்
நீ என்ன ஜாதி என்றார்கள்.. !!!!!

எழுதியவர் : அருண்வாலி (26-Jul-15, 11:24 am)
Tanglish : jathi
பார்வை : 528

மேலே